அனைத்து பாடசாலைகளிலும் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை..

அனைத்து பாடசாலைகளிலும் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு..

by Staff Writer 09-07-2025 | 8:02 AM

கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் இன்று(09) நுளம்பு ஒழிப்பு விசேட தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பாடசாலைகள், பிரிவெனாக்கள், கல்வியியற் கல்லூரிகளிலும் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை இன்று(09) காலை 08 மணி முதல் பிற்பகல் 01 மணி வரை முன்னெடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை கல்வி பணிப்பாளர் மற்றும் கல்வியமைச்சின் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட இணைப்பாளர் எஸ். எச். எச். சஞ்ஜீவனி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆசியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 06 மாதங்களில் நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களிடையே இவற்றின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கான வழிக்காட்டல் கோவையொன்றும் வௌியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் எஸ். எச். எச். சஞ்ஜீவனி குறிப்பிட்டார்.