.webp)
மட்டக்களப்பு - கருவப்பஞ்சோலை குளத்தில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்துள்ளார்.
10 முதல் 11 வயதுக்கிடைப்பட்ட 2 சிறுமிகளும் ஒரு சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற பெற்றோருடன் குறித்த 3 சிறுவர்களும் சென்றிருந்த நிலையில் குளிப்பதற்காக குளத்திற்குள் இறங்கியுள்ளனர்.
இதன்போது குளத்தின் நடுப்பகுதியில் காணப்பட்ட குழியில் சிக்கி அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.