மாரவில பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மாரவில பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

by Staff Writer 04-07-2025 | 4:10 PM

லுணுவில பகுதியில் குழியொன்றிற்குள் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போயிருந்ததாக சந்தேகிக்கப்படும்  வர்த்தகரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 20 வயதான வர்த்தகர் ஒருவர் கடந்த 30 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.

கடந்த 30 ஆம் திகதி வீட்டிலிருந்து வௌியேறிய அவர் வீடு திரும்பாததை அடுத்து மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.