ஆர்மி உபுல் கொலை தொடர்பான விசாரனை..

உயிரிழந்த ஆர்மி உபுல் கொலை தொடர்பான விசாரனைகளில் வெளிவந்த விடயம்..

by Staff Writer 04-07-2025 | 4:07 PM

ராகம - பட்டுவத்த பகுதியில் ஆர்மி உபுல் எனும் நபரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மே என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடுபவரான ஆர்மி உபுல்  தமது வீட்டுக்கு அருகில் இருந்த போது முச்சக்கரவண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்றிரவு(04) 10.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

45 வயதான ஆர்மி உபுல் என அழைக்கப்படும் நபர் கணேமுல்ல சஞ்ஜீவ எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியின் நெருங்கிப் பழகியவர் எனத் தெரியவந்துள்ளது.

அவர் முன்னாள் இராணுவ சிப்பாயென பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 
 

ஏனைய செய்திகள்