.webp)
Colombo (News 1st) இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் 26 வயது யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குருவிட்ட, தேவிபஹல, தொடன்எல்ல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யுவதியின் கழுத்து வெட்டப்பட்டு அவரது தங்கச்சங்கிலி திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழுத்தில் பல வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் யுவதி உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.