அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர்

by Staff Writer 29-06-2025 | 12:58 PM

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ தென்னகோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(28) நடைபெற்ற தேர்தலில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான விசேட வைத்தியர் தர்ஷன சிறிசேனவும் தலைவர் பதவிக்காக மீண்டும் போட்டியிட்டார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய செயலாளராக டொக்டர் பிரபாத் சுகததாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளரான ஹரித அளுத்கே போட்டியிட்டார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவிற்கான 16 உறுப்பினர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் மத்திய குழுவிற்கு 40 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.