.webp)
அவுஸ்திரேலியாவின் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான Richard Marles உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை(03) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவுஸ்திரேலிய பிரதி பிரதமர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.
அத்துடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுடனான இருதரப்பு கலந்துரையாடலிலும் அவர் ஈடுபடவுள்ளார்.
இந்த விஜயமானது இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு துறைசார் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.