.webp)
Colombo (News 1st) சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் 3 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலன்னாவ, வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18, 46, மற்றும் 56 வயதான 3 பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு(19) இந்தியாவிலிருந்து வந்த குறித்த பெண்கள் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை குளிரூட்டி மற்றும் மின் உபகரணங்களுக்குள் மறைத்துவைத்து கொண்டுவந்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்தது.