வீதி பாதுகாப்பு தேசிய சபை ஆணைக்குழுவாக..

வீதி பாதுகாப்பு தேசிய சபை​யை ஆணைக்குழுவாக மாற்ற தீர்மானம்

by Staff Writer 20-05-2025 | 10:47 AM

Colombo (News1st) வீதி பாதுகாப்பு தேசிய சபை​யை ஆணைக்குழுவாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வீதி பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தவும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக இதனூடாக நடவடிக்கை எடுக்க முடியுமெனவும் வீதி பாதுகாப்பு தேசிய சபையின் தலைவர் குமார் ஜயரத்ன தெரிவித்தார்.

வீதி பாதுகாப்பு தேசிய சபையை ஆணைக்குழுவாக மாற்றும் போது தற்போதுள்ள பணிப்பாளர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 இலிருந்து  5ஆக குறைக்கப்படும்.

நீதிக் கட்டமைப்பிற்குள் சட்டரீதியான கொள்கைகளை வகுப்பதன் மூலம் வீதி பாதுகாப்பிற்காக வினைத்திறனான நடவடிக்கைகளை எடுக்க முடியும் எனவும் தேசிய சபையின் தலைவர் குமார் ஜயரத்ன தெரிவித்தார்.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஏனைய செய்திகள்