மதுபோதையுடன் மாணவர்களை ஏற்றிச்சென்ற சாரதி கைது

மதுபோதையுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சாரதி கைது

by Staff Writer 20-05-2025 | 10:43 AM

Colombo (News1st) மதுபோதையுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சிசுசெரிய பஸ் ​சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுபெத்த நகரில் நேற்று(19)​ நடத்தப்பட்ட சோதனையில் குறித்த சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதி ரதலியகொட  பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சிசுசெரிய பஸ்ஸில் 16 மாணவர்களும் 2 பெற்றோரும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.