குஷ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை கைது

79 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை கைது

by Staff Writer 19-05-2025 | 10:27 AM

Colombo (News1st) 7kg  910g  குஷ் போதைப்பொருளை நாட்டிற்குக் கொண்டுவந்த தாய்லாந்து பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வருகைதரும் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது தமது பயணப் பையில் போதைப்பொருளை மறைத்து வைத்து கொண்டுவந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

21 வயதான தாய்லாந்து பிரஜை  மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருளின் பெறுமதி 79 மில்லியன் ரூபாவாகுமென சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.