மஹிந்தானந்த அளுத்கமகே விளக்கமறியலில்..

மஹிந்தானந்த அளுத்கமகே எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்..

by Staff Writer 19-05-2025 | 7:05 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானதையடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற உரத்தால் அரசாங்கத்திற்கு சுமார் 130 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதுடன் இறக்குமதிக்கு சட்டரீதியான அனுமதியை பெற முன்னர் கடன்பத்திரங்களை திறந்ததாக மஹிந்தானந்த அளுத்கமகே மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.