.webp)
Colombo (News 1st) அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம கிந்தெல்பிட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
குறித்த மோட்டார் சைக்கிள்களை செலுத்திய மாலபே, பிலியந்தலை, கோணபொல மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்த 21, 22, 23 வயதான நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.