வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..

வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..

by Staff Writer 14-05-2025 | 4:07 PM

Colombo (News 1st) வடக்கு, கிழக்கில் இன்றும்(14) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(14) யாழ்.வல்வெட்டித்துறையில் நினைவேந்தல் நிகழ்வும் கஞ்சி பரிமாறலும் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர வண்டி சங்கத்தினரின் ஏற்பாட்டில் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(14) காலை முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது.

அம்பாறை - காரைதீவு சந்தைக் கட்டடத் தொகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுக்கஞ்சியும் பரிமாறப்பட்டது.