388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

by Staff Writer 12-05-2025 | 1:55 PM

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் தண்டனை அனுபவித்த வருடமொன்றுக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு ஒரு வார மன்னிப்பு வழங்கப்படுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தண்டப்பணம் செலுத்தாமை காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளின் தண்டனையின் ஒரு பகுதியும் இரத்துச் செயய்ப்படவுள்ளது.

சிறைத்தண்டனையின் அரைப்பங்கினை அல்லது அதற்கு அதிகமான காலம் நிறைவு செய்துள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளின் எஞ்சியுள்ள தண்டனை காலம் இரத்துச் செய்யப்படுமென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 40 பேரும் வாரியபொல சிறைச்சாலையில் இருந்து 38 பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து 36 பேரும் மஹர சிறைச்சாலையில் இருந்து 30 பேர் உள்ளிட்ட நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் இருந்தும் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.