15 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்..

மியன்மார் சைபர் குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 15 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்..

by Staff Writer 08-05-2025 | 8:51 AM

Colombo (News 1st) மியன்மாரின் மியாவாடி பகுதியில் சைபர் குற்ற முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மியன்மார் - தாய்லாந்து எல்லை ஊடாக பயணிப்பதற்கு தாய்லாந்தினால் அனுமதி வழங்கப்படாமையால் இவர்கள் மியன்மாரில் கடந்த 2 மாதங்களாக தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

மியன்மார் - தாய்லாந்துக்கான இலங்கை தூதுவர் விஜயந்தி எதிரிசிங்கவின் ஏற்பாட்டில் இருநாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் குறித்த 15 பேரும் மீட்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.