.webp)
Colombo(News1st)
வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் மற்றும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று(06) அதிகூடிய வெப்பம் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதிக களைப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மட்டுப்படுத்தி தேவையான அளவு நீர் அருந்துமாறும் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அதிக வெப்பம் தொடர்பில் சிறார்களும் முதியோரும் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.