.webp)
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது.
தேர்தல் நடத்தப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சிமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய வாக்குச்சாவடிக்குள் நுழைய சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வௌியிட்டுள்ளது.
வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி ஊழியர்கள், வாக்குச்சாவடியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், வேட்பாளர்களுக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளர்களுக்காகவும் நியமிக்கப்படும் வாக்குச்சாவடி முகவர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்ட உள்நாட்டு, வௌிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், தெரிவத்தாட்சி அதிகாரிகளின் அனுமதி பெற்றவர்களுக்கும் வாக்குச்சாவடிக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.