.webp)
Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான 85 கிலோகிராம் எடைப்பிரிவிற்கு உட்பட்ட ரக்பி போட்டியில் பங்கேற்கவுள்ள நியூஸிலாந்து ரக்பி அணி நாட்டை வந்தடைந்தது.
1906ஆம் ஆண்டிற்கு பின்னர் நியூஸிலாந்து ரக்பி அணி இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதலாவது கட்டம் எதிர்வரும் 4ஆம் திகதியும் இரண்டாவது கட்டம் எதிர்வரும் 10ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
போட்டிகளை கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.