பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்கதடை

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

by Staff Writer 01-05-2025 | 9:29 AM

Colombo (News 1st) இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விமானங்களுக்கும் இந்திய வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை எதிர்வரும் 23ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இந்திய மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசாங்கமும் ஒரு வாரத்திற்கு முன்பே இந்திய விமானங்களுக்கு அந்நாட்டு வான்வெளியில் நுழைவதற்கு தடை விதித்திருந்தது.

ஏனைய செய்திகள்