.webp)
Colombo (News 1st) இன்று(30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை குறைப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில்,
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 293 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 20 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.
லங்கா டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 274 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் விலை 6 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 178 ரூபாவாகும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.