வெட் திருத்தச் சட்டமூலம்:2ஆம் வாசிப்பு நிறைவேற்றம்

வெட் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்

by Staff Writer 11-12-2023 | 4:48 PM

Colombo (News 1st) வெட் வரி(VAT Tax) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 57 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெட் வரி திருத்தம் தொடர்பிலான சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று(11) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

வெட் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விவாதிப்பதற்காக நேற்று(10) பாளுமன்றம் விசேடமாக கூட்டப்பட்டிருந்தது.

எனினும், கோரமின்மையால் இது தொடர்பான விவாதம் இடைநடுவே நிறுத்தப்பட்டதுடன் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று(11) காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதற்கமைய, இன்று(11) இடம்பெற்ற வெட் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.