22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த 22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

by Bella Dalima 07-12-2023 | 6:56 PM

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்பரப்பின் நெடுந்தீவு பகுதியில் 14 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று (06) கைப்பற்றினர்.

இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் சரோஜினி தேவி இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல்  வைக்கப்பட்டனர்

இதனிடையே, தலைமன்னாரில் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட 08 மீனவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் புதுக்கோட்டையை சேர்ந்த 14 மீனவர்களும் இராமேஸ்வரத்தை சேர்ந்த 08 மீனவர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.