புற்றுநோயாளர்களுக்கு உதவி கோரி பண மோசடி;மூவர் கைது

சமூக ஊடகத்தில் புற்றுநோயாளர்களுக்கு உதவி கோரி பண மோசடி; மூவர் கைது

by Bella Dalima 07-12-2023 | 6:22 PM

Colombo (News 1st) புற்றுநோயாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த மூவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக நிதியுதவி வழங்குமாறு கோரி சிலாபத்தை சேர்ந்த ஒருவர், சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். 

இதற்கமைவாக, நோயாளியின் வங்கிக் கணக்கிற்கு நன்கொடையாளர்களால் 38 இலட்சம் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்களால் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, வங்கிக் கணக்கின் ஊடாக பண மோசடி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை மற்றும் மஹியங்கனையை சேர்ந்த பெண்கள் இருவரும் ஆண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.