.webp)
Colombo (News 1st) அம்பாறை - சாய்ந்தமருதில் உள்ள மத்ரஸா ஒன்றில் 13 வயதான சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் பெற்றோர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்ரஸாவின் பிரதான நிர்வாகி பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த மதரஸாவில் பயின்று வந்த காத்தான்குடியை சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிட்டு பிரதேச மக்கள் நேற்று (05) மாலை மத்ரஸாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற சாய்ந்தமருது பொலிஸார், மத்ரஸாவின் பிரதான நிர்வாகியை தமது காவலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
மக்களின் எதிர்ப்பையடுத்து பிரதான நிர்வாகி பொலிஸ் பாதுகாப்பில் அழைத்துச்செல்லப்பட்டதோடு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே பிரதான நிர்வாகியை அழைத்துச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தார்.
இந்நிலையில், கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி M.S.M. சம்சுதீன் சம்பவ இடத்திற்கு சென்று இன்று விசாரணைகளை மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளுக்காக சிறுவனின் உடல் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னரே சிறுவனின் மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.