புதிய பொருளாதார வேலைத்திட்டம் ஜனவரி முதல் ஆரம்பம்

புதிய பொருளாதார வேலைத்திட்டம் ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும்: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

by Bella Dalima 06-12-2023 | 4:58 PM

Colombo (News 1st) அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பழைய முறைகளை தொடர்வதன் ஊடாக நாட்டிற்கு எதிர்காலம் கிடையாது எனவும், கடந்த சில வருடங்களில் தேசம் என்ற வகையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் வரை கொண்டு செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

புதிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார். 

18 மாதங்களில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து தாம் மீட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

நிலையான பொருளாதாரத்தை டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு கொண்டு செல்ல புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும் அதில் நவீன பொருளாதார முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.