முதலீட்டு திட்டத்திற்கு பயன்படும் தபால் நிலையம்

நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதி

by Staff Writer 06-12-2023 | 8:26 AM

Colombo (News 1st) நுவரெலியா தபால் நிலைய கட்டடத்தை முதலீட்டு திட்டமொன்றுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க, அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீரவிடம் வினவிய போது, தபால் நிலையத்திற்கான மாற்று இடமொன்று வழங்கியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.