நகர்ப்புற வீடுகளின் உரிமை தொடர்பான அறிவிப்பு

நகர்ப்புற வீடுகளின் உரிமையை அதன் குடியிருப்பாளர்களுக்கே வழங்கும் செயற்றிட்டத்தின் முதல் கட்டம் பெப்ரவரியில் ஆரம்பம்

by Staff Writer 06-12-2023 | 9:00 AM

Colombo (News 1st) நகர்ப்புற வீடுகளின் உரிமையை அதன் குடியிருப்பாளர்களுக்கே வழங்கும் செயற்றிட்டத்தின் முதலாவது கட்டம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கொழும்பு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நகர வதிவிட அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் உரிமை, இவ்வாறு அதன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் W.S.சத்யானந்த தெரிவித்துள்ளார்.

இவ்வாறான 52000 வீடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இவற்றில் 50 வீத வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்கள் முதல் கட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவாக செயற்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தை விரைவாகப் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.