.webp)
Colombo (News 1st) கடுகன்னாவை வைத்தியசாலையில் மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் பழைய மதிலின் புனர்நிர்மாணப் பணிகளின் போது, இன்று (06) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றதாக கண்டி மாவட்ட இடர் முகாமைத்துவ உதவி பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.
மதிலை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த உடுநுவர பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
சடலம் கடுகன்னாவை - ஹேனாவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.