இந்திய இராணுவ ஆலோசகரை சந்தித்தார் இராணுவ தளபதி

இலங்கை இராணுவத் தளபதி - இந்திய இராணுவ ஆலோசகர் இடையே சந்திப்பு

by Staff Writer 06-12-2023 | 12:18 PM

Colombo (News 1st) இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரும் இராணுவ ஆலோசகருமான எயார் மார்சல் சந்தீப் சிங்கை(Sandeep Singh) சந்தித்துள்ளார்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, முப்படைகளுக்கு இடையிலான பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பம், ஆயுதப் படைகளின் நவீன மயமாக்கல் மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய இராணுவத் தளபதியின் அழைப்பை ஏற்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.