இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை

இராணுவ சிப்பாய்க்கு மன்னார் மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை

by Bella Dalima 06-12-2023 | 4:34 PM

Colombo (News 1st) கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 

மன்னார் - பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது, கடமையில் இருந்த இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (06) குறித்த சிப்பாய்க்கு மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி M.M.M.மிகால் உத்தரவிட்டுள்ளார்.

முருங்கன் பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, குற்றவாளியை போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.