கட்டுநாயக்க - சென்னை விமான சேவைகள் இடைநிறுத்தம்

மிக்ஜாம் சூறாவளியினால் கட்டுநாயக்க - சென்னை இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்

by Staff Writer 05-12-2023 | 8:19 AM

Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை தாக்கியுள்ள மிக்ஜாம் சூறாவளியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேற்றைய(04) தினமும் 2 விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை சென்னைக்கான விமான சேவைகளை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.