நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜோசப் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

by Bella Dalima 05-12-2023 | 4:11 PM

Colombo (News 1st) ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர்களுக்கு எதிராக, பொல்துவ சந்தி முதல் பாராளுமன்ற நுழைவு வரையில், பொதுமக்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்  செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு மாத்திரம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

எவ்வாறாயினும், அமைதியான முறையில் எதிர்ப்பை வௌிப்படுத்தவும், கருத்துகளை வௌியிடுவதற்கும் இதனூடாக எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.