இலங்கை - இந்திய இராணுவத் தளபதிகள் புது டெல்லியில் சந்திப்பு

by Bella Dalima 05-12-2023 | 5:36 PM

Colombo (News 1st) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவை சந்தித்துள்ளார்.

புது டெல்லியிலுள்ள இராணுவ தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய இராணுவத்தினரால், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிற்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டுள்ளது.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இருதரப்பு இராணுவங்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்பான விடயங்கள் குறித்து இரு நாட்டு  இராணுவத் தளபதிகளும் கலந்துரையாடியுள்ளனர்.

இங்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.