.webp)
Colombo (News 1st) இப்பாகமுவ, நெல்லிய, வெல்கால வித்தியாலயத்திற்கு இன்று ஒரு முக்கியமான நாளாகும்.
இந்த பாடசாலை மாணவர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்ட குடிநீர் பிரச்சினைக்கு இன்று(05) கம்மெத்தவினால் தீர்வு வழங்கப்பட்டது.
வெல்கால வித்தியாலய மாணவர்களும் அந்த கிராம மக்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கலை எதிர்நோக்கினர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக கம்மெத்தவினால் அடிக்கல் நாட்டப்பட்ட நீர் சுத்திகரிக்கும் தொகுதியினை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவடைந்து, அதனை பாடசாலை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கம்மெத்தவின் தலைவர் ஷெவான் டெனியல் தலைமையில் இன்று(05) இடம்பெற்றது.