.webp)
இந்தியாவில் மிக்ஜாம் சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் தெற்கு ஆந்திர பிரதேசத்தை ஊடறுத்துள்ள சூறாவளியினால், கடும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை அங்கு நிலவுகின்றது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 9,500 பேர் 211 நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த சூறாவளி 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த 27 ஆம் திகதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறியது.
மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்த மிக்ஜாம் தீவிர புயலாக ஆந்திர கடற்கரையை அண்மித்த பாபட்லா பகுதியில் கரையைக் கடந்துள்ளது.
புயல் கரையை கடந்த வேளை, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.