பிலிப்பைன்ஸில் 7.6 மெக்னிட்யூட் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 7.6 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

by Bella Dalima 02-12-2023 | 9:15 PM

Colombo (News 1st) பிலிப்பைன்ஸில் 7.6 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

பிலிப்பைன்ஸின் மிண்டானா (Mindanao) பகுதியில் 63 கிலோமீட்டல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

இதனையடுத்து, பிலிப்பைன்ஸிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் நேரப்படி (1600 GMT) நள்ளிரவில் சுனாமி அலைகள் பிலிப்பைன்ஸை தாக்கக்கூடும் என்று பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

சிறிது நேரத்தின் பின்னர், 3 அடி உயரமான சுனாமி அலைகள் அதிகாலை  1:30 மணிக்கு (சனிக்கிழமை 1630 GMT) ஜப்பானைத் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.