2022 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு: யாழ். வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை மாணவி இரண்டாமிடம்

by Bella Dalima 01-12-2023 | 3:13 PM

Colombo (News 1st) 2022 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று (01) அதிகாலை வௌியாகின. 

பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk இணையத்தளங்களின் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சையில் 4 ,72,553 பேர் தோற்றியிருந்தனர்.

பரீட்சை பெறுபேறு தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், க.பொ.த சாதாரண தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் யாழ். வேம்படி மகளிர் உயர் தர பாடசாலையின் அக்ஷயா அனந்தசயனன் இரண்டாமிடம் பெற்றுள்ளார். 

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முன்னிலை பெற்றுள்ளவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது. 

இதற்கமைய, சாதாரண தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் கண்டி மஹாமாயா மகளிர் வித்தியாலயத்தின் சமாதி அனுராத ரணவக்க முதலிடம் பெற்றுள்ளார். 

கொழும்பு ரோயல் கல்லூரியின் அரித மின்சந்து அலஹகோன், சாதாரண தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் மூன்றாமிடம் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திருகோணமலை இந்து மகளிர் கல்லூரியின் தர்ஷனா கோணேஷ் 06 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.