வவுனியா - செட்டிக்குளத்தில் இருவர் வெட்டிக்கொலை

வவுனியா - செட்டிக்குளத்தில் இருவர் வெட்டிக்கொலை

by Bella Dalima 30-11-2023 | 4:57 PM

Colombo (News 1st) வவுனியா - செட்டிக்குளத்தில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

செட்டிக்குளத்தை சேர்ந்த 72 மற்றும் 68 வயதான தம்பதியினரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், இன்று (30) காலை சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

செட்டிக்குளத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றுடன் இணைந்ததாக அமைந்துள்ள வீட்டில் இவர்கள் வசித்து வந்துள்ள நிலையில், இந்த கொலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.