மாத்தறை மாவட்ட இணை தலைவராக சஜின் வாஸ் நியமனம்

சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட இணை தலைவராக சஜின் வாஸ் குணவர்தன நியமனம்

by Bella Dalima 30-11-2023 | 3:16 PM

Colombo (News 1st) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட இணை தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (30) நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இணை தலைவர் பதவிக்கு மேலதிகமாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளராகவும் சர்வதேச நடவடிக்கைகளுக்கான செயலாளராகவும் அவர் செயற்படுகின்றார்.

ஹேமால் குணசேகர, ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்டத்திற்கான மற்றுமொரு  இணை தலைவராக செயற்படுகின்றார்.