இலங்கை பங்கேற்கவுள்ள போட்டித் தொடர்கள் அறிவிப்பு

2024-இல் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கவுள்ள போட்டித் தொடர்கள் அறிவிப்பு

by Bella Dalima 29-11-2023 | 7:05 PM

Colombo (News 1st) அடுத்த வருடத்தில் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கவுள்ள போட்டித் தொடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை மூலம் இதனை அறிவித்துள்ளது. 

அதற்கமைய,  சிம்பாப்வே அணி 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச T20 போட்டிகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. 

அதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதுடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கை அணி பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. 

டெஸ்ட் , சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச T20 போட்டிகள் இந்த இரண்டு தொடர்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அடுத்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள சர்வதேச T20 உலகக்கிண்ணத்திலும் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது.

இதன் பின்னர் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் இலங்கை அணி 7 தொடர்களில் பங்கேற்கவுள்ளது. 

அடுத்த வருடத்தில் இலங்கை அணி பங்கேற்கவுள்ள 6 தொடர்கள் சொந்த மண்ணில் நடைபெறவுள்ளதுடன், 5 தொடர்கள் சுற்றுலா தொடர்களாக அமையவுள்ளன.

இதேவேளை, பல்வேறு தொடர்களைக் கொண்ட உற்சாகமான ஆண்டை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.