.webp)
Colombo (News 1st) அளுத்கமையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், வஸ்கடுவ கொஸ்கஸ் சந்தியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸூடன் மோதியுள்ளது.
செக் குடியரசு நோக்கி பயணிக்கவிருந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய குறித்த பஸ், காலி வீதியில் இருந்து கரையோர மார்க்கத்திற்கு பயணித்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் மற்றும் ரயில் சாரதி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து காரணமாக அளுத்கமையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில் மாத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
ஏனைய ரயில் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.