இடைக்கால அறிக்கை ஜனாதிபதி செயலாளரிடம் கையளிப்பு

ரயில்வே திணைக்கள மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உள்ளடங்கிய இடைக்கால அறிக்கை ஜனாதிபதி செயலாளரிடம் கையளிப்பு

by Staff Writer 29-11-2023 | 8:14 AM

Colombo (News 1st) ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் உள்ளடங்கிய இடைக்கால அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படை திட்டங்கள் தொடர்பில் குறித்த அறிக்கையில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளதாக குழுவின் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்ர குறிப்பிட்டுள்ளார். 

ரயில் சேவையை வினைத்திறனுடையதாக மாற்றுதல் மற்றும் நட்டத்தை குறைத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பான யோசனைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

ரயில் சேவையை மறுசீரமைப்பது தொடர்பில் யோசனைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 16 பேரும் முன்னாள் ரயில்வே பொதுமுகாமையாளரும் நியமிக்கப்பட்டனர். 

இந்த குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கையளிக்கப்படவுள்ளது.