ஜப்பான் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திக்காக ஜப்பான் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

by Bella Dalima 22-11-2023 | 4:28 PM

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் MIZUKOSHI Hideaki மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த நிதியானது கடற்றொழிலாளர்களுக்கான குளிரூட்டல் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான நவீன உபகரணங்களை பெற்றுக்கொடுத்தல் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.