.webp)
Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டில் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.
இதனையடுத்து, 2024 ஆம் ஆண்டில் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு தென்னாபிரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் காணப்படும் நிர்வாக நிச்சயமற்ற நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.