UNHRC முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 03-10-2023 | 12:36 PM

Colombo (News 1st) இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தாமும் இலங்கை அரசாங்கமும் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.