நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் ICJ அறிக்கை

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் சுதந்திரங்கள் மீதான தாக்குதல் என சர்வதேச சட்டவல்லுநர்கள் சங்கம் தெரிவிப்பு

by Bella Dalima 30-09-2023 | 3:31 PM

Colombo (News 1st) இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலமானது கருத்து வெளியிடுதல், தகவல் அறியும் சுதந்திரங்கள் மீதான தாக்குதல் என சர்வதேச சட்டவல்லுநர்கள் சங்கம் (International Commission of Jurists) தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டவல்லுநர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் தவறான பதிவுகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் ஆழமான குறைபாடுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தவறி வரும் சூழலில், இவ்வாறானதொரு சட்டமூலம் தவறான முறையில் பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாக  சங்கம் கூறியுள்ளது. 

அரசாங்கத்தின் நடத்தை மற்றும் கொள்கைகள் தொடர்பான மக்களின் விவாதத்தை நசுக்குவதற்கு இந்த சட்டமூலம் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் சர்வதேச சட்டவல்லுநர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.