தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

by Bella Dalima 27-09-2023 | 7:13 PM

Colombo (News 1st) எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

முறையற்ற வரிக்கொள்கை, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க சுகாதார அமைச்சருக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு இன்று கூடியபோது, இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.