.webp)
Colombo (News 1st) 2024 நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சட்டவரைஞர்களினால் தயாரிக்கப்பட்டுள்ள 2024 நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.