13 வகையான போகப் பயிர்களை பயிரிட இணக்கம்

பெரும்போகத்தில் 13 வகையான போகப் பயிர்களை பயிரிட இணக்கம்

by Staff Writer 24-09-2023 | 6:32 PM

Colombo (News 1st) எதிர்வரும் பெரும்போகத்தில் 13 வகையான போகப் பயிர்களை பயிரிட இணக்கம் காணப்பட்டுள்ளது. 

விவசாய திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள போகப் பயிர்கள் தொடர்பான தலைவர்கள் மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இடையே அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் ​போது குறித்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம், பயறு, கௌப்பி, சோயா, போஞ்சி, குரக்கன், கொண்டைக்கடலை, உளுந்து, நிலக்கடலை போன்ற பயிர்களைப் பயிரிடுவதற்கே இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளது. 

எதிர்வரும் பெரும்போகத்தில் நெல் அறுவடை மேற்கொள்ளப்படும் வரை, தேவையான அரிசி மற்றும நெல் தொகை நாட்டில் காணப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.